வேதாரண்யம் அருகே காட்டுப்பகுதியில் இருந்து வழிமாறி நாலுவேதபதி ஊராட்சி குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு எருமையால் கிராம மக்கள் அச்சம் வனத்துறையினர் பிடித்து காட்டுப் பகுதியில் விட கோரிக்கை
நாகப்பட்டினம் மாவட்டம் வேதரண்யம் அடுத்த நாலுவேதபதி ஊராட்சி காட்டுப்பகுதியில் இருந்து வழிமாறி குடியிருப்பு பகுதியில் காட்டு எருமை ஒன்று புகுந்துள்ளது. அது வீடுகளுக்கு அருகே சுற்றி வருவதால் பொது மக்கள் அச்சமடைந்தனர். மேலும் வீடுகளில் வளர்த்த மா, வாழை, கொய்யா மற்ற பயிர் வகைகளையும் தின்று நாசமாக்கியதால் அப்பகுதியினர் அந்த காட்டு எருமையை விரட்டிய போது குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். காட்டு எருமை ஊருக்குள் புகுந்து உள்ளதை கிராம மக்கள் வனத்துறையினர்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வனத்துறை சார்பில் ஒலி பெருக்கி மூலமாக கிராம மக்களுக்கு அச்சப்பட தேவையில்லை என அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் எந்த காட்டுப் பகுதியில் இருந்து வந்துருக்க கூடும் எனவும் ஆய்வு செய்து வருகின்றனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்குள் உடனடியாக வனத்துறையினர் ஊருக்குள் சுற்றித் திரியும் காட்டு எருமையை பிடித்து வனப் பகுதியில் விட வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.