in

குடியுரிமைச் சட்டத்தை புதுச்சேரியில் ஆளும் அரசு அமல்படுத்தினால் அதை காங்கிரஸ் கட்சி எதிர்க்கும்


Watch – YouTube Click

குடியுரிமைச் சட்டத்தை புதுச்சேரியில் ஆளும் அரசு அமல்படுத்தினால் அதை காங்கிரஸ் கட்சி எதிர்க்கும்

குடியுரிமைச் சட்டத்தை புதுச்சேரியில் ஆளும் அரசு அமல்படுத்தினால் அதை காங்கிரஸ் கட்சி எதிர்க்கும் என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்

காங்கிரஸ் வேட்பாளரை எதிர்க்க புதுச்சேரி பாஜகவில் வேட்பாளர் இல்லை எனவும் விமர்சனம்

புதுச்சேரியில் சிறுமி ஆர்த்தி படுகொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மகளிர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவி பஞ்சகாந்த தலைமை தாங்க நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் தின கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது..

சிறுமி ஆர்த்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கை ஆளும் பாஜக என். ஆர். காங்கிரஸ் அரசு பூசி மெழுக பார்க்கிறது எனவே மாணவி ஆர்த்தி கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றார்.

இந்திய குடியுரிமை சட்டத்தை தற்போது அமல்படுத்திருக்கிறார் கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நரேந்திர மோடியின் மிருக பலத்தால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார்கள்.

நான்காண்டு காலம் நடைமுறைக்கு கொண்டுவரப்படாத குடியுரிமை சட்டத்தை தேர்தலுக்காக நாங்கள் சிறுபான்மையினர் பக்கம் இருக்கிறோம் என்று காட்டுவதற்காக அவர்கள் தற்போது நிறைவேற்றி இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

இந்த சட்டத்தை டெல்லி, மேற்குவங்கம், கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை இந்த சட்டம் ஜனநாயகத்திற்கு எதிரானது இந்திய இறையாண்மைக்கு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று மக்கள் ஒற்றுமைக்கு எதிரானது எனவே இதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்கள்,ஆனால் மோடி அரசு நான்காண்டு காலம் தூங்கி விட்டு தற்போது இந்துக்களின் வாக்குகளை பெறலாம் என்பதற்காக தற்போது நடைமுறைப்படுத்துவதாக குற்றம் சாட்டிய நாராயணசாமி…

இது நன்றாக நாட்டு மக்களுக்கு தெரியும் நரேந்திர மோடி மற்றும் பாரத ஜனதா கட்சியின் தந்திரங்கள் இனி மக்களிடம் எடுபடாது என்றார்.

குடியுரிமைச் சட்டத்தை அமுல்படுத்துவது என்பது சிறுபான்மையினருக்கு எதிரானது எனவே காங்கிரஸ் கட்சி சார்பிலும் நாங்கள் அதை எதிர்க்கிறோம் என்று குறிப்பிட்டார்.

குடியுரிமை சட்டத்தை புதுச்சேரியில் என். ஆர். காங்கிரஸ் அரசும் பாஜகவும் அமல்படுத்த நினைத்தால் அதை நாங்கள் எதிர்ப்போம் என்று குறிப்பிட்ட அவர் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை எதிர்க்க பாஜகவில் வேட்பாளர் இல்லை என்ற நிலைமை உருவாக்கிய இருப்பதாக தெரிவித்த அவர் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி புதுச்சேரியில் பிரகாசமாக உள்ளது என்றார்


Watch – YouTube Click

What do you think?

பொண்டாட்டி கிட்ட கேட்காம வேறு யாரு கிட்ட கேட்க முடியும்? சரத்குமார் ஆவேசம்

அம்மாவின் நினைவு நாளில்…. நெகிழ வைத்த பிக் பாஸ் ஆரி அர்ஜுன்