திருவெறும்பூர் அருகே குளத்தில் முதலை உள்ளதாக பொதுமக்கள் அச்சம் இதுவரை முதலையை பிடிக்கவில்லை என வனத்துறையினர் மீது குற்றச்சாட்டு
திருச்சி திருவெறும்பூர் அருகே கீழக்குறிச்சி ஊராட்சி நத்தமாடிப்பட்டியில் கல்லறை குளம் உள்ளது அந்தக் குளத்தில் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் வெளியூரை சேர்ந்தவர்களும் அங்கு வந்து குளிப்பதாகவும்.
மேலும் அந்த குளத்தில் ஆடு, மாடுகளும் தண்ணீர் குடிப்பதாகவும் இந்த நிலையில் குளத்தில் குளித்த சில இளைஞர்களும் , வெளியூரில் இருந்து வந்த பொதுமக்களும் இந்த குளத்தில் முதலை இருந்ததாகவும் அதை அதைப் பார்த்துவிட்டு ஊர் பொதுமக்களிடம் கூறியுள்ளனர்.
ஊர் பொதுமக்கள் இது சம்பந்தமாக திருச்சி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர் அவர்கள் அந்த குளத்தை பார்வையிட்டு முதலை இருப்பதை உறுதி செய்துவிட்டு அந்த குளத்தின் அருகில் எச்சரிக்கை பலகையும் வைத்துவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் இந்த குளத்தில் மூன்று மாதமாக முதலை உள்ளதாகவும் அந்த முதலை ஏழு கிலோ முதல் 10 கிலோ வரை உள்ளதாகவும் இதுவரை அந்த முதலையை வனத்துறையினர் பிடிக்கவில்லை எனவும் பொதுமக்களை கடித்தால் வனத்துறை தான் பொறுப்பு எனவும் மேலும் உடனடியாக இந்த முதலையை பிடிக்க வேண்டும் எனவும் வனத்துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்