சாப்பாட்டுகே வழி இல்லை…. துணையாய் இருந்த அண்ணனும் இறந்துவிட்டார்…. கதறிய சாண்ட்ரா
கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை சாண்ட்ரா மலையாள படங்களில் குழந்தை நட்சித்திரமாக நடித்தவர், தமிழில் விஜய் நடித்த , “கண்ணுக்குள் நிலவு” என்ற படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார், 2009 ஆம் சன் டிவியில் ஒளிபரப்பான அசத்த போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார் சாண்ட்ரா.
பிறகு பல்வேறு சீரியல்கலில் நடித்தவர் ,சன் மியூசிகில் பிரபல தொகுப்பாளராக இருந்த ப்ரஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். கடைசியாக தலையணை பூக்கள் என்ற சீரியலில் நடித்தார்.
திருமணத்திற்கு பிறகு சான்றா திரையில் அதிகமாக தலைகாட்டவில்லை. ஆனால் சமீபத்தில் எந்த நேரத்திலும் என்ற ஒரு படத்தில் மட்டும் நடித்தார். அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் ஏன் வெளி உலகத்திற்கு தன்னை அறிமுகப்படுத்த விரும்பவில்லை என்ற கேள்விக்கு முதன்முறையாக கண்ணீருடன் பதிலளித்தார்.
நான் ப்ரஜனை காதலிக்கும் தருணத்தில் திடீரென்று என் அப்பா இன்னொரு பெண்ணை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டார் இவரைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார் என் அண்ணனோ அவரின் விருப்பத்திற்கு விட்டுவிடு என்று கூறிவிட்டார்.
நாம் மறுத்தால் நாளை அவர் வாழ்க்கையை நாம் கெடுத்து விட்டதாக சொல்வார் என்று கூறினார். பிறகு வீட்டை விட்டு வெளியேறி நானும் பிரஜனும் திருமணம் செய்து கொண்ட போது எங்களுக்கு இருக்க ஒரு வீடு கூட இல்லை பிரஜனிடம் அப்போது ஒரு காரும் பழைய துணிகள் மட்டுமே இருந்தது அந்த காரில் மட்டும் தான் நாங்கள் பல நாட்கள் சுற்றி சுற்றி வீடு தேடினோம்.
நாங்கள் திருமணத்திற்கு பிறகு நிறைய கஷ்டப்பட்டோம் பிரஜனுக்கு வேலை இல்லை ஒருவேளை சாப்பாட்டுக்கே வழிஇல்லை. பசி தாங்க முடியாமல் ஒருநாள் பிரஜனின் ஃபிரண்டுக்கு போன் செய்து எங்கள் வீட்டில் அரிசி கூட இல்லை என்று அழுத போது அவர்தான் ஒரு முட்டை அரிசி எடுத்துட்டு வந்து எங்க வீட்ல போட்டார்.
கஷ்டத்தை மட்டுமே அனுபவித்த நாட்கள் நிறைய…. வாழ்க்கையில் ஒரு நிலையை அடைந்த பிறகு தான் எங்களுக்கு குழந்தை வேண்டும் என்று நாங்கள் முடிவு எடுத்தோம் ஆனால் பிரஜன் அவர் வீட்டுக்கு செல்லும் பொழுது அவங்க அம்மா அடிக்கடி ஏன் உங்களுக்கு குழந்தை இல்லை என்று கேட்கும் பொழுது பிரஜன் அவர்களுடன் சண்டை போடுவார்.
ஆனால் அதைப்பற்றி என்னை ஒரு வார்த்தை கூட அவர் கூறியது கிடையாது. பிரஜன்குள் ஒரு சிறந்த நடிகர் இருக்கின்றார் என்று எனக்கு தெரியும் அதனால் அவரை நடிகராக்கும் முயற்சியில் நான் இருந்தேன் எவ்ளோ கஷ்டப்பட்டாலும் பிரஜினுடைய கனவை நினைவாக்க வேண்டும் என்று தான் என்னை நான் வருத்திக் கொண்டேன் எங்களுக்கு இப்பொழுது இரண்டு மகன்கள் உண்டு.
நான் கஷ்டப்பட்ட நேரத்தில் என் கூடவே இருந்த அண்ணன் இப்பொழுது உயிருடன் இல்லை உடைந்து அழுத்த அவரை தேற்றிய பிரஜன்….கூடவே இருந்த அண்ணணன் எதனால் இறந்தார்… சாண்ட்ரா மீண்டது எப்படி அடுத்த பதிவில் காண்போம்.