in

சினிமாவில் ஐந்தாண்டுகள் பணியாற்ற தடை…..நடிகர்கள் மீடியாவில் வெளியிட கூடாது…. விசாகா கமிட்டி முடிவு


Watch – YouTube Click

சினிமாவில் ஐந்தாண்டுகள் பணியாற்ற தடை…..நடிகர்கள் மீடியாவில் வெளியிட கூடாது…. விசாகா கமிட்டி முடிவு

 

பெண்களிடம் தவறாக நடக்க முற்பட்டால் சினிமாவில் ஐந்தாண்டுகள் பணியாற்ற தடை. ஹேமா கமிஷன் ….ரிப்போர்ட் வெளிவந்து மலையாள உலகை கதி கலக்க வைத்த நிலையில் தமிழ் திரை உலகமும் உஷராகி விட்டது.

தமிழ் சினிமா…வுக்கு வரும் பெண்களுக்கு எதிராக வன்குற்றங்கள் ஏற்பட்டால் அவர்களை விசாரிக்க தனி குழு ஒன்றை அமைக்கப்படும் என்று பொது செயலாளர் விஷால் பேட்டி அளித்தார்.

மேலும் 22 .4. 2019 அன்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விசாகா என்ற கமிட்டி உருவாக்கப்பட்டது. அந்த கமிட்டியின் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர், கமிட்டி தலைவர் ரோகிணி உள்ளிட்ட பல நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நடிகைகளிடம், தயாரிப்பார்கள், நடிகர்கள் இயக்குனர்கள் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் யாராவது தவறாக நடக்க முற்பட்டால் அவர்களை விசாரணை குழு விசாரித்து உண்மையை அறியும் பட்சத்தில் அவர்களுக்கு ஐந்தாண்டுகள் திரைத்துறையில் பணியாற்றுவதில் இருந்து தடை விதிக்கப்படும்.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையிடம் புகார் அளிக்க முற்பட்டால் அவர்களுக்கு சட்ட ரீதியாக அனைத்து உதவிகளையும் கமிட்டி செய்யும். ஆனால் மீடியாவில் குற்றங்கலை கூறாமல் கமிட்டி …யிடம் புகார் அளிக்க வேண்டும்.

யூட்யூபில் திரை துறையினர் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி தவறாக பதில் விட்டால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசாறிடம் புகார் அளித்தால் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பும் அளிக்கப்படும் என்று ஏக மனதாக இந்த குழுவில் முடிவெடுக்க பட்டது.


Watch – YouTube Click

What do you think?

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான மோகன்ராஜ் மறைந்தார்

கோட் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி