தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் நந்தியம் பெருமான் திருகல்யாணம்
நந்தியம் பெருமான் திருகல்யாணத்திற்காக அய்யாறப்பர் – அம்பாள் சுயசாம்பிகை கண்ணாடி பல்லாக்கிலும், நந்திகேஸ்வரர் பட்டு வேஷ்டி கட்டி மாப்பிள்ளை கோலத்தில் குதிரை வாகனத்தில் திருமழப்பாடிக்கு புறப்பட்டு சென்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் அறம்வளர்த்தநாயகி உடனாகிற அய்யறப்பர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களால் கட்டப்பட்ட இந்த ஆல்யம் தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நந்தியம் பெருமான் பிறப்பு விழா மற்றும் கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறும். அதேபோல் இந்தாண்டு நந்தியம்பெருமான் பிறப்பு விழா நேற்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து பட்டாபிஷேகம் இன்று காலை நடைபெறுகிறது.
முன்னதாக மஞ்சள், சந்தனம், பால், தயிர் திரவிய பொடி, கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து காலை அய்யாறப்பர் – அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லாக்கிலும், நந்தியம்பெருமான் பட்டுவேட்டி – பட்டுசட்டை அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் குதிரை வாகணத்தில் அமர்ந்து வாணவேடிக்கை, இன்னிசை கச்சேரியுடன் திருவையாறில் புறப்பட்டு தில்லைஸ்தானம், கடுவெளி, வைத்தியநாதன்பேட்டை வழியாக கொள்ளிடம் ஆற்றில் இறங்கி அரியலூர் மாவட்டம் திருமழாபாடிக்கு திருகல்யாணத்திற்காக செல்கின்றனர்.
அதனை தொடர்ந்து இன்று இரவு திருமழாப்பாடியில் வைத்தியநாதன் சுவாமி கோவிலில் நந்தியம் பெருமானுக்கும் – சுயசாம்பிகைக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.