தஞ்சையில் நடந்த மாற்றுதிறனாளிகள் முகாமில் மாற்றுதிறனுடைவோர், பங்கேற்றனர்.
ஆற்றல் நிறைந்த மாற்றுதிறனாளிகள் பற்றி, நமது Britian Tamil Broadcasting
சிறப்பு பார்வையில் பார்ப்போம்.
நெற்களஞ்சிய சோழமண்ணின் தலைநகரில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலகம் மற்றும் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து மாற்று,திறனாளிகளுக்கான மாபெரும் ஒருநாள் மருத்துவ முகாம் ,உதவி திட்டமுகாமை நடத்தியது.
மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப்,திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் மற்றும் அதிகாரிகள் முகாமை பார்வையிட்டனர்.
முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட, மாற்றுதிறனாளிகள். மனதில் தன்னம்பிக்கையுடன் நமது வாழ்வும் வளமுடன் அமையவேண்டும் என்ற நம்பிக்கையில் உறுதியோடு முகாமில் பங்கேற்றனர்.
சமீபத்தில் ஐ.நா சபை. மாற்றுதிறனாளிகளின் அனைத்து உரிமைகளையும்
பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியது,
அதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உலக வங்கி நிதி உதவியுடன், மாற்றுதிறனாளிகளுக்கு, தமிழ்நாட்டில், 1.773 கோடி மதிப்பில் உரிமை திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது, என தெரிவித்தார்.
தஞ்சையில் நடந்த மாற்றுதிறனாளிகள் முகாம் பற்றி அதிகாரிகள் கூறுகையில்
மாற்றுதிறனாளிகளின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும் என்ற தமிழக முதல்வரின் திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சியரின் ஆலோசனைபடி மாவட்ட மாற்றுதிறனாளி நலத்துறை சார்பில், மாற்றுதிறனாளிகளுக்காக, மருத்துவ சான்று, தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணம், மாதாந்திர உதவிதொகை, வங்கி தொழிற்கடன் உதவி, என அனைத்து நல திட்டங்கள் பெறுவதற்கு உதவிகரமாக
அமைய இந்த முகாம் ஏற்பாடு செய்யபட்டது என்றனர். மாவட்ட ஆட்சியர் நல திட்டங்களையும் வழங்கினார் என்றனர்.
மாற்றுதிறனாளிகளும் சாதனைபடைக்க முடியும் என்பதற்கு மாற்றுதிறனாளிகளுக்கு உதாரணமாக, இன்றும் போற்றபடுபவர்கள்,
பார்வை, பேச்சு, கேட்கும் திறன் என மூன்றையும் இழந்து, மார்வையற்றோர் படிக்க
எழுத்தை உருவாக்கிய ஹெல்லன் அமெரிக்காவை சேர்ந்த, ஹெல்லன்கில்லர், பக்கவாதத்தால், கால்,கைகள் பாதிக்கபட்ட நிலையிலும் கணிதத்தில் நோபல் பரிசு பெற்ற ஸ்டீபன் ஹாக்கிஸ் ஆகியோர் என்பது குறிப்பிடதக்கது.
அதேபோல தனது இரண்டு கால்களும் நடக்க முடியாத நிலையிலும்,மாற்று
திறனாளிகளின் வளர்ச்சிக்காக சேவையாகபாடுபட்டுவரும்
A.R. தமிழ்நாடு மாற்றுதிறனாளி மாநில பொறுப்பாளர் ஆயிஷா பெண்மணி
மருத்துவ முகாம் பற்றி கருத்து தெரிவித்தார்.