தஞ்சை கீழவாசல் பழைய மீன் மார்க்கெட் பின் புறத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு
தஞ்சை கீழவாசல் பழைய மீன் மார்கெட் பின்பு புறம் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது இந்த தீ விபத்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொழுந்துவிட்டு எரிந்து காணப்பட்டது இதனால் அங்கு பரபரப்பு நிலவியது
இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர் அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் கழிவுகள் மற்றும் அட்டைப்பெட்டிகள் மட்டுமே இருந்து காணப்பட்டது மேலும் அங்கு லாரிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை கழிவுகள் மற்றும் அட்டைப்பெட்டிகள் குவிந்த வண்ணம் காணப்படுவதால் அங்கு ஒரு சில மர்ம நபர்கள் இயற்கை உபாதை கழிப்பதற்கும் சிகரெட் அடிப்பதற்கும் செல்கின்றனர் இதனால் தீப்பெட்டி பற்ற வைக்கும் போது அதனை அணைக்காமல் தூக்கி எறிந்ததால் தீ பிடித்திருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் மேலும் மாநகராட்சி குப்பைகளை அல்ல எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை குப்பைகள் குவிந்த வண்ணம் உள்ளது மீன்களை எடுத்துச் செல்லும் தேவையற்ற அட்டைப்பெட்டிகலே அதிகமாக காணப்படுகிறது இதனை மாநகராட்சி கருத்தில் கொண்டு இனி ஒரு அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க குப்பைகளை அங்கிருந்து அகற்றி விட வேண்டும் இதனால் பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர் இந்த தீ விபத்தால் அங்கு சிறிது பரபரப்பாக காணப்பட்டது