in

தண்ணீரின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யோகாசனம் செய்து உலக சாதனை


Watch – YouTube Click

தண்ணீரின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யோகாசனம் செய்து உலக சாதனை படைத்த சிறுவர்,சிறுமிகள்.

மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு யோகா பெடரேஷன் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அதனை கொண்டாடும் விதமாகவும், அந்த கொண்டாட்டத்தின் போது ஏதேனும் நல்ல கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தியும், யோகா பெடரேஷன் ஆஃப் தமிழ்நாடு சார்பில் தென்காசி மாவட்டம், ஆய்க்குடி ஜே.பி. தனியார் கல்லூரியில் நோபல் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த உலக சாதனை நிகழ்ச்சியின் போது, தண்ணீரின் அவசியம் குறித்தும், தண்ணீரை சேமிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அர்த்தமஜேந்திரா ஆசனத்தை 300-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் ஒருசேர மூன்று நிமிடங்களுக்கு மேல் செய்து உலக சாதனை படைத்தனர்.

இந்த உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சியில் தமிழக முழுவதும் உள்ள 10 மாவட்டங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் பங்கேற்று தலையில் டம்பளரில் தண்ணீர் வைத்த படி மூன்று நிமிடங்கள் அர்த்த மஜேந்திரா ஆசனத்தை செய்து உலக சாதனை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் ஏற்பாட்டுக் குழுவினர் சந்தியா, பரணிதரன் அமைப்பாளர் தமிழ்நாடு யோகா பெடரேஷன் பொதுச் செயலாளரும், இந்தியன் யோகாசன ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் தேசிய செயலாளர் டாக்டர் அரவிந்த் லட்சுமி நாராயணன்,ஜெயச்சந்திரன் உள்ளிட்ட யோகா மாஸ்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

கல்வியில் கடைசி மாவட்டம், மது விற்பணையில் முதல் மாவட்டம் விழுப்புரம் அன்புமணி ராமதாஸ் பேட்டி

தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம்