நெல்லை மாநகர பகுதியில் இருந்து தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவு நீரைத் தடுக்கும் வகையில் 660 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டம் 24 மாதங்களில் செயல்படுத்தப்படும் என தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17 மற்றும் 18- ந்தேதி பெருமழை பெய்து தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் நதிக்கரைப் பகுதிகள் சேதம் அடைந்ததுடன் கழிவு பொருட்கள் ஆகியவையும் ஆற்றுப்பகுதியில் ஒதுங்கியது. மேலும் கண்ணாடி பாட்டில்கள், துணிகளும் நதிக்கரையை மாசுபடுத்தும் வகையில் குவிந்து கிடந்தது. இதனை அடுத்து மாவட்ட நிர்கம் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து
வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பொருட்கள் சுத்தப்படுத்தும் பணி இன்று நடைபெற்றது . நெல்லை மணிமூர்த்திஸ்வரம் பகுதியில் நடந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணியினை தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவிகள், வருவாய்த்துறையினர். தன்னார்வ அமைப்பினர் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஆற்றின் கரைப்பகுதியில் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட கழிவு பொருட்கள், ஆற்றுக்கு மாசு ஏற்படுத்தும் பொருட்களை அகற்றினர். கரைகளும் புணரமைக்கப பட்டது .
இதுகுறித்து ஆட்சியர் கார்த்திகேயன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எல்லை கற்கள் கண்டறிந்து எல்லை கற்களை நடும் பணிகள் நடைபெறும் வெள்ளத்தை தாங்கி நிற்கும் நீர் மருது மரங்கள் நடப்படும். சுமார் 10,000 மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது தாமிரபரணி ஆற்றை புனரமைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது
நெல்லை மாநகர பகுதிகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் 660 கோடியில் ரூபாய மதிப்பில் கழிவு நீரை சுத்திகரித்து தொழிற்சாலை பயன்பாட்டிற்கு கொண்டு செல்லும் திட்டம் இன்னும் 24 மாதங்களில் செயல்படுத்தப்படும்.
இதுபோன்று தாமிரபரணியில் கழிவு நீர் கலக்காமல் ஊரகப் பகுதிகளிலும் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது போன்று தாமிரபரணி நிரந்தர சீரமைப்பு விரிவான திட்ட அறிக்கை இறுதி கட்டத்தில் உள்ளது. பசுமை தீர்ப்பாயத்து கண்காணிப்பில் மூன்று இடங்களில் இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தை விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்