திண்டிவனம் மயான கொள்ளை திருவிழா சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்
திண்டிவனத்தில் ஆண்டுதோறும் மயான கொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் இதே போன்று இந்த ஆண்டு வருகின்ற 9-ந் தேதி மயானக் கொள்ளை திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில் மயானக் கொள்ளை திருவிழா முன் ஏற்ப்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் பொது அமைதிக்கு களங்கம் விளைவிப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதே போன்று திருவிழா சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் அரசியலை புகுத்த கூடாது என்றும் சார் ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
சார் ஆட்சியர் திவ்யான்சு நிகாம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விழா ஏற்ப்பாடுகள் குறித்து பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் நகர முக்கியஸ்தர்கள், கோயில் நிர்வாகிகள் ஆகியோரிடம ஆலோசனைகள் பெறப்பட்டது. பின்பு மயான கொள்ளை திருவிழா குறித்து ஆலோசனைகளை அதிகரிகள் வழங்கினார்.குறிப்பிட்ட நேரத்திற்குள் மயான கொள்ளை ஊர்வலத்தை முடிக்க வேண்டும் மயான கொள்ளை ஊர்வலத்தில் கட்சி கொடிகள் அமைப்பு கொடிகள் ஏதும் பயன்படுத்தக் கூடாது எனவும் சார் ஆட்சியர் தெரிவித்தார்.
இதில் டி எஸ்.பி சுரேஷ் பாண்டியன், வட்டாட்சியர் சிவா,காவல் ஆய்வாளர்கள் விஜயகுமார் , தருணேஸ்வரி ,திண்டிவனம் தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன்,கோயில் நிர்வாகி பிர்லா செல்வம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் ,கோயில் விழா குழுவினர் நகர முக்கியஸ்தர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.