தமிழ்நாட்டில் திமுக – அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளை தாண்டி எந்த கட்சியும் வரக்கூடாது எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி எஸ்டிபிஐ பொறுத்தவரை மதவாதத்திற்கு எதிராக நிற்கக்கூடிய பக்கம் நிற்போம்
உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் செய்யது முஹம்மது கலீபா சாஹிப்பின் இல்ல திருமண விழா தர்காவில் இன்று நடைபெற்றது. நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் திரை பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறுகையில் ; தமிழக முதல்வர் தமிழக அரசின் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் வாக்குறுதி சொன்னதுபோல இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையை நிறைவேற்ற வேண்டும்.
CAA போன்ற குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றிய தவறுகளை நாங்கள் எதிர்க்கிறோம். பாஜகவை விட்டு வெளியே வந்த அதிமுகவை ஆதரிக்கிறோம். தமிழ்நாட்டில் திமுக- அதிமுக இரண்டையும் தாண்டி இன்னொன்று தமிழ்நாட்டில் வரக்கூடாது என்பது எங்களுடைய நிலைப்பாடு. வரும் காலங்களில் CAA நிறைவேற்றப்பட்டால் அதிமுக முதலில் வலுவாக எதிர்க்கும் என்று அதிமுக தெரிவித்துள்ளது.
CAA தமிழகத்தில் ஒரு வாரத்தில் நிறைவேற்றப்படும் என ஒன்றிய அமைச்சர் கூறுவது அரசியல் காரணங்களுக்காக. CAA இந்த நாட்டில் அமல்படுத்தப்படாது. அப்படி அமல்படுத்தப்பட்டால் ஜனநாயக சக்திகளை ஒன்று சேர்த்து எஸ்.டி.பி.ஐ எதிர்க்கும். அதைவைத்து அரசியல் செய்வதை கண்டிக்கிறோம். சிறுபான்மை மக்களை காக்க யார் எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும் நாங்கள் வரவேற்போம் என்று கூறினார்.