திரிஷாவை கேவலபடுத்திய அதிமுக செயலாளர்…. கீழ்த்தரமான இவரின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்…நடிகை ஆவேசம்
கடந்த ஆண்டு திரிஷாவை பற்றி அவதூறாக பேசி சர்ச்சையில் மாட்டிய மன்சூர் அலிகான் ஒரு வழியாக மன்னிப்பு கேட்டு அந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தற்பொழுது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேலம் மாவட்ட செயலாளர் ஏ வி ராஜு சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது நிருபர்கள் கேட்ட சில கேள்விக்கு பதில் அளிக்கையில் ஜெயலலிதா மறைந்த பின்னர் கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த பொழுது அவர்களை சந்திக்க சில சினிமா நடிகைகள் அங்கு சென்றதாகவும் அப்பொழுது எம்எல்ஏவாக இருந்த நடிகர் கருணாஸுக்கும் இந்த விஷயம் நன்றாக தெரியும் என்றும் கூறி பரப்பரப்பை ஏற்படுத்தினார்.
இவரின் இந்த கருத்திற்கு நடிகை திரிஷா கடும் கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது தன்னை பற்றி கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் இப்படிப்பட்ட கீழ்த்தரமான கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது எனக்கு வேதனையாகவும் அருவருப்பாகவும் இருக்கிறது.
என்னைப் பற்றி அவதூறாக பேசிய அவர் மீது நிச்சயம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரிஷா கூறியுள்ளார்.
மேலும் த்ரிஷாவின் இந்த கருத்தை ஆதரித்த இயக்குனர் சேரன் அவர்கள் திரிஷா மீது அவதூறு பரப்பும் ஏவி ராஜுவை கைது செய்ய வேண்டும் எந்த ஆதாரமும் இல்லாமல் பொதுவெளியில் சினிமா துறையினரை பற்றி அவதூறாக பேசியதற்கு காவல்துறை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் விஷால் மற்றும் கார்த்தி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இவர்கள் கண்டனம் ஒரு பக்கம் இருக்க மன்சூர் அலிகான் இதற்கு கண்டம் தெரிவித்தது தான் நகைச்சுவையாக இருக்கிறது.
த்ரிஷாவை பற்றி அவதூறாக பேசிய முன்னாள் நிர்வாகி ராஜு அவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அரசியல்வாதி என்ற பெயரில் கேவலமான அருவருப்பான வகையில் திரைத்துறையில் உள்ள சக நடிகர் நடிகைகளை பற்றி பேசியுள்ளார்.
எங்கள் துறையில் யாரைப் பற்றி பேசினாலும் ஆண் வர்க்கத்தினருக்கும் அதில் பங்கு உண்டு. திரைத்துறையினரும் அரசியல்வாதிகளும் சமத்துவம் பேணும் இந்த தமிழகத்தில் மிகவும் கீழ்த்தரமாக அவர் விமர்சனம் செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
எங்கள் துறையினரை இவர் கேவலப்படுத்தியது மிகவும் மன வேதனையை அளிக்கிறது. தன்மானம் மிக்க நடிகைகள் உள்ள இந்த சமுதாயத்தில் இவர்கள் போன்று பேசும் ஆண்கள் ஆபத்தானவர்கள்.
இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்று மன்சூர் அலிகான் த்ரிஷாவை பற்றி அவதூறாக பேசியதை மறந்து பேசி இருக்கிறார் என்று மட்டும் நன்றாக தெரிகிறது. மன்சூருக்கு செலக்டிவ் அம்னீஷியா போல…