நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு ஆஷட நவராத்திரி பெருவிழா
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வாராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
வாராஹி அம்மனுக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கிய ஆஷாட நவராத்திரி பெருவிழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது.தினமும் கும்மி கோலாட்டத்துடன்
வராகி அம்மனுக்கு சிறப்பான அலங்காரம் மற்றும் சக்தி பூஜை மகா தீபாராதனை நடைபெற்றது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் வாராகி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சந்தன அலங்காரம், பழ அலங்காரம், காய்கறி அலங்காரம், பூ அலங்காரம், என பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து 11 நாட்களும் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.
வாராஹி அம்மனுக்கு 11வது நாள் திங்கட்கிழமை மின் அலங்கார முத்து பல்லக்கில் வான வேடிக்கையுடன் மேலத்தளங்கள் & பம்பை முழங்க வாராஹி அம்மன் திருவீதி உலா விமர்சியாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோனா சித்தர் அவர்கள் கலந்து கொண்டு திருவீதி உலாவை தொடங்கி வைத்தார்.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.