நாகை அருகே 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருணாச்சலீஸ்வரர் ஆலயத்தில் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர் தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த கீழையூரில் கோச்சங்க சோழர் காலத்தில் கட்டப்பட்ட 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த அருணாச்சலேஸ்வர் ஆலையம் அமைந்துள்ளது .இந்த ஆலையத்தில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக திருப்பணிகள் நடைபெறுகிறது.இதற்காக தரை போடுவதற்கான பணிகள்நடைபெற்று வருகின்றன.
அப்போது கோவிலின் நடுப்பகுதியில் கருவறைக்கு செல்லும் முன் இடது புரத்தில் சுரங்கப்பாதை உள்ளது தெரியவந்தது.அந்த பாதையில் இறங்கி சென்றால் சுமார் 10 அடி சென்ற பிறகு அதற்குள் சிறிது பாம்பு புற்றுபோல் உள்ளது .மேலும் தொடர்வதற்கு தடையாக உள்ளது.இதனால் பணியாளர்கள் உள்ளே செல்வதற்கு அச்சப்பட்டுகொண்டு வெளியே வந்து விட்டனர்.
இது குறித்து சம்மந்தப்ட்ட அதிகாரிகள் பார்வையிட்டு அந்த சுரங்க பாதை எங்கே செல்கிறது என தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் நாகை அருகே பழமை வாய்ந்த ஆலயத்தில் சுரங்கப்பாதை இருந்த செய்தி காட்டுத்தீயாய் பரவி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்