நாகை எல்ஐசி அலுவலகம் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் நடத்திய நகல் எரிப்பு போராட்டம்
பரப்பப்பநகல் எரிப்பு போராட்டத்தில் நகலை எரிய வைக்க லைட்டரோடு போராடிய காங்கிரஸ் கட்சியினர்; எரியாத நகல் பேப்பரை பிடிங்கி அணைத்த போலீசார்; மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை எல்ஐசி அலுவலகம் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் நடத்திய நகல் எரிப்பு போராட்டத்தில் பரப்பப்பு
பேட்டி: ஆர்.என் அமிர்தராஜா நாகை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்
மத்திய அரசு நிறைவேற்றிய சிஏஏ என்னும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் எல்ஐசி தலைமை அலுவலகத்திற்கு முன்பாக சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைப்பெற்றது. மாவட்ட தலைவர் அமிர்தராஜா தலைமையில் நடைப்பெற்ற போராட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்ட நகலை எரித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது சட்ட நகலை எரிக்க லைட்டரை கொண்டு பேப்பரை கொளுத்தினர் அப்போது லைட்டர் மக்கர் பண்ணவே நீண்ட நேரமாக பேப்பரை பற்ற வைக்க போராடினர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த போலீசார் பற்றாத பேப்பரை மல்லுக்கட்டி பிடுங்கி அணைத்தனர். சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் நகலை பற்ற வைக்க போராடிய சம்பவம் சிரிப்பலையோடு பரப்பரப்பை ஏற்படுத்தியது.