படத்தைப் பார்த்துட்டுப் படுத்தா, கேவலமான கனவுகள் தான் வருது… கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்
ரன்பீர் கபூர் – ராஷ்மிகா நடித்த ‘அனிமல்’ படத்தை திரை பிரபலங்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அனிமல் படத்தை பற்றி x தளத்தில் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் ‘படம் நல்லாருக்கு… ஆனா, ரொம்ப வக்கிரமா இருக்கு’ என்று கிண்டலாக விமர்சித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது ”அனிமல் படம் வக்கிரத்தின் உச்சம் என்று தான் சொல்லணும். சமூகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான பல குற்றங்கள் நடந்துட்டு வரும் சூழலில், ஆணாதிக்கத்துடனும் அதிக வன்முறையுடனும் இப்படம் எடுக்கப்பட்டிருக்கு.
ஒரு பாலியல் தொழிலாளி அல்லது ஒரு குடும்பத்தில் நடக்கும் பிரச்னையைப் பற்றி படம் எடுக்கிறோம்; பேசுகிறோம் என்றால் தவறில்லை. ஆனால், அதை எப்படி படத்தில் காண்பிக்கிறோம், என்பது முக்கியம்.
அனிமல்’ படத்தின் திருமணக் காட்சியில் அத்தனைபேர் முன்னிலையில் வில்லன் அந்தப் பெண்ணிடம் வக்கிரமாக நடந்துகொள்ளும் விதம் எரிச்சலாக இருந்தது.
அதேமாதிரி, கொலைகளை ரத்தம் சிந்தி அதிக வன்முறையுடன் காட்டவேண்டுமா? சில சீன்கள் ரொம்ப அருவருப்பா இருந்துச்சு. ராஷ்மிகா முன்னணி நடிகையா இருக்காங்க. ஆனா, அவங்கள மாதிரி நடிகை இந்தப் படத்துல நடிக்கும்போது தவறான கருத்துகள் மக்களைப் போய்ச் சேரும். பெண்களை சிறுமைப்படுத்தும் கதைகளில் நடிக்க ராஷ்மிகா யோசிக்கவேண்டும்.
இப்படியொரு படம் எடுக்கிறவங்க மனசுல நிச்சயமா வக்கிரம் இருக்கும்? அவங்களோட மனசுக்குள்ள இருக்கிற மொத்த வக்கிறத்தையும் கொட்டிட்டாங்க. படத்தைப் பார்த்து முடிச்சதுமே தாங்கமுடியாமத்தான் கிண்டலா ட்விட்டர் போட்டேன். ஆனா, ரசிகர்கள் வேறமாதிரி எடுத்துக்கிட்டாங்க. இப்படியொரு கேவலமான படத்தை வெளிப்படையால்லாம் திட்ட முடியாது.
இப்படிப்பட்ட படத்தில் நடிகைகளும் நடிக்க ஒகே சொல்லிடறாங்க. மக்களும் பார்த்து வெற்றியடைய வைக்குறாங்க. அனைவரும் ஒன்றிணைந்து எங்கக் குழந்தைகளுக்கு இந்தமாதிரி படம் வேண்டாம்னு நினைச்சு புறக்கணிச்சா, எவனும் வக்கிர புத்தியோட படம் எடுக்கமாட்டான்.
இளம் தலைமுறையினர் தவறான வழிக்குத்தான் செல்வார்கள். படத்தைப் பார்த்துட்டுப் படுத்தா, கேவலமான கனவுகள்தான் வருது. அப்படியிருக்கு இருக்கு படம்” என்கிறார் கோபம் கொப்பளிக்க.