பழமை வாய்ந்த கோயிலில் பாரம்பரிய திருவிழா
பெரியாண்டவர், பெரியாயி சிலை அருகே காய்கனிகள், தானியங்கள் மற்றும் பொறிகளை இறைத்து வேண்டுதல்களை நிறைவேற்றும் பக்தர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் பெரியாண்டவர், பெரியாயி மயான கொள்ளை நிறைவு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் அங்காள பரமேஸ்வரி அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அமர்ந்து மாடவீதி, குளத்து தெரு, புதிய தெரு உள்ளிட்ட கிராமத்தில் முக்கிய வீதியின் வழியாக உலா வந்தது இறுதியாக கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியாயி சிலையை வலம் வந்து பக்தர்கள் கொண்டு வந்த காய்கனிகள், தானியங்கள் மற்றும் பொறிகளை சூறையாடி பெரியாயி சிலையை சுற்றி இறைத்து ஆக்ரோஷமாக பக்தர்கள் அரிவாளுடன் வலம் வருவர்.
மேலும் வேண்டுதல் உள்ள பக்தர்கள் பெரியாண்டவர், பெரியாயி உள்ளிட்ட பல்வேறு வேடம் அணிந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவர்.
இந்நிகழ்வைக்கான போளூர், சேத்துப்பட்டு, அவனியாபுரம், கொழப்பலூர், பெரணமல்லூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
குறிப்பு பெரியாண்டவர், பெரியாயி சிலை அருகே பக்தர்கள் கொண்டு வந்த காய்கனிகள், தானியங்கள் மற்றும் பொறிகளை இறைக்கும் போது சில பக்தர்களுக்கு சாமி வந்து ஆடியது குறிப்பிடத்தக்கது