பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசிய ராகுல் காந்திக்கு கண்டணம்
ராகுல் காந்தியின் உருவப்படத்தை கிழித்தும் செருப்பால் அடித்தும் பாஜகவினர் எதிர்ப்பு
ராகுல் காந்தி உருவம் பொறித்த பொய் மூட்டையை எரிக்க முயன்ற பாஜகவினருடன் போலீசார் கடுமையான தள்ளுமுள்ளு
பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசிய ராகுல் காந்தியை கண்டித்தும், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி மாநில பாஜக ஓ.பி.சி அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி ஓ.பி.சி அணி மாநில தலைவர் நடராஜன் தலைமையில் இந்திரா காந்தி சிலை முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தியை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும் ராகுல் காந்தியின் உருவ படத்தை கிழித்தும் செருப்பால் அடித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
தொடர்ந்து கோஷம் எழுப்பிக் கொண்டிருந்த பாஜகவினர் மறைத்து வைத்திருந்த ராகுல் காந்தியின் பெயருடன் உருவம் பொறிக்கப்பட்ட பொய் மூட்டையை எரிக்க முயன்றனர் அப்போது போலீசார் அதை பறிமுதல் செய்தனர் இதனால் பாஜகவினருக்கும் போலீசாருக்கும் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போராட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம் குறித்து ஓ.பி.சி அணி தலைவர் நடராஜன் கூறும்போது…
பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் அதுவரை தங்களது போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.