பீதியை ஏற்படுத்திய பாக்கியராஜ் வீடியோ ஆதாரமற்றது
ஹிமாச்சல் பிரதேசத்தில் இருந்து சென்னை திரும்பி திரும்பிக்கொண்டிருக்கும் போது சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் கார் விபத்துக்குள்ளாகி ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள Sutlej ஆற்றில் கவிழ்ந்தது.
கிட்டத்தட்ட ஒன்பது நாட்களுக்குப் பிறகு அவரின் சடலம் மீட்கப்பட்டது இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்கு முன்பே இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் அவர்கள் பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது கோயம்புத்தூர் அருகே உள்ள ஆற்றில் குளிக்க வரும் சிலரை அந்த ஆற்றல் மூழ்கடித்து கொள்கின்றனர், மேலும் அவர்களின் உடலை அங்கு இருக்கும் பாறைகளின் அடியில் ஒலித்து வைத்து உடலை மீட்க வருபவரிடம் பணம் சம்பாதிக்க இந்த யுக்தியை கையாள்கிறார்கள் பாக்யராஜின் இந்த வீடியோ மக்களிடையே வைரல் ஆனதை தொடர்ந்து.
அவரின் இந்த குற்றச்சாட்டிற்கு கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விளக்கம் அளித்திருக்கிறார்.
பாக்யராஜின் இந்த பதிவில் உண்மை இல்லை அதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை பதிவாகவில்லை மேலும் மேட்டுப்பாளையத்தில் இவ்வாறு குற்றம் நடந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இன்னும் பதிவாகவில்லை 2022 முதல் 2023 வரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று பதிவாகியுள்ளது.
அதனால் பாக்யராஜ் அவர்கள் தேவை இல்லாமல் வதந்தியை பரப்புவது குற்றம் மக்களிடையே தேவை இல்லாமல் பீதியை ஏற்படுத்த வேண்டாம் என்று தமிழ் நாடு ஃபேக்ட் செக் இணையதளத்தில் பத்ரிநாதன் அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளார்.
இதனை பார்க்கும் பொழுது பாக்கியராஜ் அவர்கள் சொல்வதில் உண்மை இல்லை என்றும் தெரிகிறது..