புதுச்சேரியை மருத்துவ சுற்றுலா நகரமாக மாற்ற நடவடிக்கை..
முதலமைச்சர் ரங்கசாமி தகவல்…
புதுச்சேரி கிருமாம்பாக்கத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள விநாயகா மிஷன்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு விழா இன்று நடைபெற்றது. விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழக வேந்தர் கணேசன் தலைமை தாங்கிட முதலமைச்சர் ரங்கசாமி மருத்துவமனையை திறந்து வைத்தார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, சிறிய மாநிலமான புதுச்சேரியில் ஜிப்மர் உட்பட ஏராளமான தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.இவை அனைத்தையும் இணைத்து மருத்துவ சுற்றுலா நகரமாக புதுச்சேரி மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் புதிய தொழில்நுட்பங்கள் மருத்துவத்தில் உள்ளது.
அந்த தொழில்நுட்பங்கள் புதூச்சேரிக்கு கொண்டு வந்து புதிய விதமான மருத்துவ வசதியை கொடுக்க வேண்டும். எங்களது அரசு உங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கும் என்றும் பேசினார்.
மேடைப்பேச்சு: ரங்கசாமி, முதலமைச்சர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழக வேந்தர் கணேசன், புதுச்சேரியில் அனைத்து மருத்துவமனைகளையும் ஒன்றிணைத்து மருத்துவ பூங்காவை உருவாக்க வேண்டும் . அதற்கான சாலை வசதிகள், விமான போக்குவரத்து உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
இதன் மூலம் பல நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் குறைந்த செலவில் அனைத்து சிகிச்சைகளையும் பெற முடியும். தற்போது 10% குறைவானவர்களே மருத்துவ காப்பீடு பெற்றுள்ளனர். 50 சதவிதத்திற்கு மேலானோர் மருத்துவ காப்பீடு பெற்றால் தரமான சிகிச்சையை மக்கள் பெற முடியும் என்றும் தெரிவித்தார்.