ஆரோவில் 57 உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி ஏராளமான வெளிநாட்டினர் உள்ளூர்வாசிகள் கலந்து கொண்டு கூட்டு தியானம் செய்தனர்
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது இந்த நகரத்தை உருவாக்க அன்னை மிரா அல்பாசா தலைமையில் 1968ம் ஆண்டு பிப்ரவரி 28ல் கட்டுமானப் பணிகள் துவங்கியது. அதனையொட்டி, ஆண்டுதோறும் ஆரோவில் உதய தினம் ஆரோவில் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆரோவில் 57ம் ஆண்டு உதய தினத்தை முன்னிட்டு, அதிகாலை ஆரோவில் ஆம்பி தியேட்டரில் வளாகத்தில் போன் பயருடன் கூட்டு தியானம் நடைபெற்றது இதில் 1000 மேற்பட்ட வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர் வாசிகள் கலந்து கொண்டு உலக அமைதி வேண்டி கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர். தீபிழபின் ஒலியில் மாத்தி மந்திரம் தங்க நிறத்தில் சொல்லித்ததை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர் மேலும் ஆரோவில் முழுவதும் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.