in

பல கோடி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார்


Watch – YouTube Click

பல கோடி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார்

 

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே மத்திய அரசின் பெயரை சொல்லி ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் ஒரு மாதத்தில் ஒரு கோடி ரூபாய் திருப்பி தருவதாக கூறி 1,000க்கும் மேற்பட்டவர்களிடம் பல கோடி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் பரபரப்பு.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ளது மொட்டணம்பட்டி கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் மத்திய, மாநில அரசின் உதவியுடன் அறக்கட்டளை துவங்கி நடத்தி வருவதாக அப்பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆகையால் அறக்கட்டளையில் உறுப்பினராக சேர்ந்தால் ஒரு மாதத்தில் ஒரு லட்சத்துக்கு ஒரு கோடி ரூபாய் திருப்பி தரப்படும் என உறுதி அளித்துள்ளார்.

இது எவ்வாறு சாத்தியம் என பொதுமக்கள் கேட்ட பொழுது தமிழகத்தில் நூறு வருடங்களுக்கு மேல் பழமையான கோயில்களின் கோபுரத்தில் உள்ள கலசத்தில் இருடியம் ஈஉள்ளது என்றும் அந்த இருடியம் ஆனது தன்னிடம் இருப்பதாகவும் இதனை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா மூலம் வெளிநாடுகளில் விற்பனை செய்து பல்லாயிரம் இலட்சம் கோடி பணம் தருவதாக என கூறியுள்ளார்.

அதற்கு முன் தனது அறக்கட்டளையில் பத்தாயிரம் ரூபாய் செலுத்தி உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும் அதனை தொடர்ந்து ஒரு லட்ச ரூபாய் தருபவர்களுக்கு ஒரு மாதத்தில் ஒரு கோடி ரூபாய் திரும்ப தரப்படும் என கூறியுள்ளார்.

இதனை உண்மை என நம்பிய மொட்டணம்பட்டி, பாடியூர், கொசவபட்டி, வேலாயுதம்பாளையம், செண்டுவழி, அங்கனம்பட்டி உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரானா காலத்தில் பெருமாள் சொல்வது உண்மை என நம்பி தங்களது வீட்டில் உள்ள நகைகளை அடமானம் வைத்தும், விற்பனை செய்தும் சேமித்து வைத்த பணத்தையும் கொண்டு போய் பெருமாளிடம் கொடுத்துள்ளனர் .

அதற்கு பெருமாள் குடும்ப செலவிற்காக தங்களிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டதாக கூறி புரோ நோட் எழுதிக் கொடுத்துள்ளார். மேலும் உங்களது வங்கிக் கணக்கில் ஒரு மாதத்திற்கு பின் பணம் வர வைக்கப்படும் என கூறி அனைவரையும் நம்ப வைத்துள்ளார் காலங்கள் கடந்தது, மாதங்கள் கடந்தது, வருடங்கள் கடந்தது, ஆனால் பணம் வந்த பாடு இல்லை. இதுகுறித்து பெருமாள் இடம் கேட்ட பொழுது பிரதமர் நரேந்திர மோடி நீதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசு அதிகாரிகள் ஆகியோர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆகையால் சீக்கிரம் பணம் உங்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் எனக் கூறியுள்ளார். சில காலங்களுக்குப் பிறகு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பெயரில் போலியான ஆவணத்தை காட்டி தனது பெயருக்கு பணம் வந்து விட்டது என்றும் ஆடிட்டிங் நடந்து கொண்டிருப்பதால் முடிந்தவுடன் பணம் வங்கி கணக்கில் வர வைக்கப்படும் என மாற்றி மாற்றி கூறியுள்ளார்.

இதற்காக போலியான RBI நகலை பணம் கட்டியவர்கள் மத்தியில் காட்டியுள்ளார். மேலும் பணம் கேட்டுச் சென்றால் ஆட்களை வைத்து மிரட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுபோல் ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் பல காரணங்களை கூறி கோடிக்கணக்கில் பெருமாள் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடமதுரை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று 31.05.24 மொட்டணம்பட்டியை சேர்ந்த பெண்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். பின்னர் லட்சக்கணக்கில் தங்களிடம் மோசடி செய்த பெருமாள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதிபிடம் மனு கொடுக்கச் சென்றனர் ஆனால் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இல்லாத நிலையில் வேறு வழி என்று திரும்பிச் சென்றனர்.

இதுபோல் பல ஊர்களில் பெருமாள் மத்திய அரசு மற்றும் பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் பெயரைச் சொல்லி கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

மதுரையில் தேசிய நெடுஞ்சாலையில் பைக் ரேஸ் செய்த இளைஞர்களால் சர்ச்சை

குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் நகராட்சி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுனர்