in

புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் கார் டி செல் சிகிச்சை அப்பல்லா டி ராஜா மருத்துவமனை சாதனை


Watch – YouTube Click

புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் கார் டி செல் சிகிச்சை அப்பல்லா டி ராஜா மருத்துவமனை சாதனை

அப்பல்லா மருத்துவமனை சாதனை

புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் கார்-டி செல் சிகிச்சை நுட்பத்தை நோயாளிகள் சிலருக்கு சென்னை அப்பல்லா மருத்துவமனை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

முழுக்க, முழுக்க உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட இத்தகைய நுட்பத்தின் மூலம் சிகிச்சையளிப்பது இந்தியாவிலேயே இது முதன்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அப்பல்லோ மருத்துவக் குழுமத்தின் துணைத்தலைவர் பிரீத்தா ரெட்டி, அப்பல்லோ புற்றுநோய் மையத்தின் இயக்குநர் டாக்டர் டி.ராஜா ஆகியோர் கூறுகையில்,

ரத்தம் சார்ந்த புற்றுநோய் பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கு புற்று செல்கள் பல்வேறு கட்ட சிகிச்சைகளுக்கு பிறகும் அழியாமல் இருந்தால் அவர்களுக்கு கார்}டி செல் சிகிச்சை முறை பரிந்துரைக்கப்படுகிறது.

அதாவது உடலின் ரத்த வெள்ளையணுக்களில் உள்ள எதிர்ப்பாற்றலுக்கான டி}செல்களானது தனியே பிரித்தெடுக்கப்பட்டு, ஆய்வகத்தில் சில மாறுதல்களுக்கு உட்படுத்தப்படும்.

அதன்படி, அந்த செல்களில் சிமெட்ரிக் ஆன்டிஜென் ரெசப்டார் எனப்படும் எதிர்ப்பாற்றல் ஏற்பிகள் மேம்படுத்தப்பட்டு கார்}டி செல்லாக அவை மாற்றப்படும். அந்த செல்கள் நோயாளியின் உடலில் செலுத்தப்படும்போது புற்றுநோய்க்கு எதிரான எதிர்ப்பாற்றல் வாழ்நாள் முழுவதும் இருந்து கொண்டே இருக்கும். இதனால், புதிதாக புற்று செல்கள் உருவானாலும் அவற்றை எதிர்த்து உடலின் எதிர்ப்பாற்றலே போராடும்.

அந்த வகையிலான சிகிச்சையை ஆறு நோயாளிகளுக்கு அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.


Watch – YouTube Click

What do you think?

பிப்ரவரி 17 இல் விண்ணில் பாயும் ஜிஎஸ்எல்வி எஃப்14 ராக்கெட்

10 வயது சிறுவன் எழுதிய ஹியூமனிட்டி வின்ஸ் புத்தகம்