in

பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகளுக்கு எந்தநாட்டிலும் அங்கீகாரம் வழங்கவில்லை அமைச்சர் தங்கம்தென்னரசு


Watch – YouTube Click

பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகளுக்கு எந்தநாட்டிலும் அங்கீகாரம் வழங்கவில்லை ஆனால் நமது முதல்வர் கொடுத்துள்ளார், அதுதான் மகளிர் உரிமைத்தொகை, மூன்றாண்டு கால ஆட்சியில் 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக நெல்லையில் திமுக சார்பில் நடந்த திண்ணை பிரச்சாரத்தில் கலந்து கொண்ட நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு தெரிவித்துள்ளார்.

திமுக அரசின் சாதனைகள் மற்றும் நிதிநிலை அறிக்கையின் சிறப்பு அம்சங்களை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்லும் வகையில் தமிழகம் முழுவதும் திமுகவினர் வீடு வீடாக சென்று திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் தச்சநல்லூர் 2- வாது வார்டு பகுதியில் மாநில வர்த்தகர் அணி இணைச் செயலாளர் மாலைராஜா ஏற்பட்டில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமையில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் நிதித்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திண்ணைப் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசுகையில் திமுக அரசின் சாதனைகள், நிதிநிலை அறிக்கையின் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களை எடுத்து கூறினால் நாட்கள் போதாது, அவ்வளவு திட்டங்கள் உள்ளது . திமுக அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளில் 80 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

என்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என கேட்கிறார்கள், அவர்களுக்கு கூறிக்கொள்கிறேன், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கப்பட்டுள்ளது இந்த திட்டத்திற்காக 3050 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 440 கோடி அளவு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனால் பெண்களுக்கு ஒரு மாதத்திற்கு 900 ரூபாய் மிச்சமாகிறது. ஒன்றிய அரசு என ஒரு அரசு செயல்பட்டு வருகிறது, அவர்கள் திடிர் திடிர் என விலையை ஏற்றுகிறார்கள் சமையல் எரிவாயு இன்று 1000 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது, இதனால் மகளிர் குடும்பத்தை நடத்த கஷ்டப்படுவார்கள், அவர்களுக்கு இலவச பயண 900 ரூபாய் உதவியாக இருக்கும். மகளிர் உரிமைத்தொகை இன்று 1 கோடியே 13 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது , இதற்காக ஒவ்வொரு வருடமும் 13 ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்கப்படுகிறது . இந்த திட்டத்தால் பெண்களின் சமூக பொருளாதார நிலையை உயர்கிறது.

பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகளுக்கு எந்தநாட்டிலும் அங்கீகாரம் வழங்கவில்லை ஆனால் நமது முதல்வர் கொடுத்துள்ளார், அதுதான் மகளிர் உரிமைத்தொகை, ஆர்ட்டிசம் உள்ள குழந்தைகள், திருநங்கைகள், ஆதரவற்றவர்கள் என இவர்கள் பயன்பெறும் வகையில் தாயுமானவராக இருந்து முதல்வர் மக்களை தேடி தேடி சென்று திட்டங்களை வழங்கி வருகிறார்.

ஆனால் பிரதமர், நிதியமைச்சர் ஆகியோர் இந்த பகுதிக்கு வந்துள்ளனர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிமிடம் வரை சல்லி பைசா கூட வழங்கவில்லை , ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய், வீடு இழந்தவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார் . உங்களின் கஷ்டங்களை கண்டு ஓடி வருபவர்கள் திமுக காரர்கள்தான், தேர்தல் களம் மட்டும் அல்ல எப்போது உங்களோடு இருப்பது திமுக இயக்கம்தான், எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, தலைமை செயற்குழு உறுப்பினர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன், மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் விஜிலாசத்தியானந்த் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

IPL 2024 ஸ்டெய்னுக்கு பதில் டேனியல் விட்டோரி

தாழ்வு மனப்பான்மை அகல போட்டி தேர்வு அவசியம் – இன்ஸ்பெக்டர் ராஜகுமார்