போளூர் பேருந்து நிலையம் எதிரே அமைக்கப்பட்டுள்ளபிரதான நிழற்கூடத்தில் மது அருந்தும் மது பிரியர்கள்
குடிமகனே, பெருங்குடி மகனேனேனே.! மது பிரியர்களின் அட்ராசிட்டி பல்வேறு கோணங்கள், பல்வேறு காட்சிகள்
இதுக்கு பேரு பயணிகள் நிழற்க்கூடம் இல்லப்பா பாரு போல
போளூர் பேருந்து நிலையம் எதிரே அமைக்கப்பட்டுள்ள பிரதான நிழற்கூடத்தில் ஜாலியாக மது அருந்தும் மது பிரியர்களின் பல்வேறு காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்.திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேருந்து நிலையம் எதிரே பயணிகள் அமர்வதற்காக பிரதான நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது
இந்த நிழற்கூடத்தில் பல்வேறு ஊர்களுக்கு பயணம் செய்யும் பயணிகள் பேருந்து வருகைக்காக காத்திருக்கும் போது அமர்வதற்கு வசதியாக சுமார் 50க்கும் மேற்பட்ட இருக்கைகளுடன் உள்ளன.
இந்த நிழற்கூடத்தில் திருவண்ணாமலை, வேலூர், திருப்பதி, விழுப்புரம், திருச்சி, சேலம், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளுக்காகவும் அதேபோல் அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காகவும் பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் தினந்தோறும் காத்திருந்து நிழற்கூடத்தில் அமர்ந்து செல்வது வழக்கம்
இந்நிலையில் இந்த நிழற்கூடத்தில் உள்ள இருக்கைகள் மது பிரியர்களின் ஆக்கிரமிப்பால் நாள்தோறும் பயணிகளும், மாணவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
மேலும் அங்கேயே அமர்ந்து ஜாலியாகவும், ரிலாக்ஸாகவும் பாரில் அமர்ந்து குடிப்பது போன்று மது அருந்துவதால் பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளுக்கு முகசூழிப்பையும் வேதனையும் ஏற்படுத்தி வருகிறது.
மேலும் இந்த பிரதான நிழற்க்கூடம் எதிரே அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது எனவே உடனடியாக மது பிரியர்களின் கூடாரமாக விளங்கும் நிழற்க்கூடத்தில் உள்ள மது பிரியர்களை அகற்றி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் போளூர் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நிழற்கூடத்தில் மது அருந்தி பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் இடையூறு ஏற்படுத்துவார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.