மகனை இழந்து உடைந்து போயிருக்கிறேன்
த்ரிஷாவின் சோரோ( Zorro) என்ற நாய் கிறிஸ்துமஸ் அன்று இறந்த செய்தியைப் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.
நடிகை த்ரிஷா கிருஷ்ணன் தனது வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இருந்த சோரோ இழப்பால் உடைந்து போனதாக தனது ரசிகர்களுடன் சோகமான செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
இந்த குறிப்பில், “என் மகன் சோரோ இன்று கிறிஸ்துமஸ் அதிகாலையில் காலமானார். என்னை நன்கு அறிந்தவர்களுக்கு இனி என் வாழ்க்கையின் அர்த்தம் பூஜ்ஜியமானது என்று தெரியும். நானும் எனது குடும்பமும் உடைந்து அதிர்ச்சியில் இருக்கிறோம்.