in

மதுரையில் போதையில்லா சமுதாயத்தை உருவாக்கிட விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி

மதுரையில் போதையில்லா சமுதாயத்தை உருவாக்கிட விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி

 

துரையில் போதையில்லா சமுதாயத்தை உருவாக்கிட வலியுறுத்தி 100 மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி நடைபெற்றது. பேரணியை மாநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்

மதுரை வில்லாபுரம் புதுநகர் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மற்றும் மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, மதுரை செய்தியாளர்கள் சங்கம் மதுரை மாவட்ட ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பில் போதையில்லா சமுதாயத்தை உருவாக்கிட விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி நடைபெற்றது.

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் துவங்கிய பேரணியை மாநகர காவல் ஆணையாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இருந்து யாதவர் கல்லூரி வரை சென்று மீண்டும் ரேஸ்கோர்ஸ் மைதானம் வந்து சேரும் இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது

நிகழ்ச்சியில் போதையில்லா சமுதாயத்தை உருவாக்கிட வலியுறுத்தி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் தேசிய மற்றும் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.

What do you think?

மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற நகராட்சி பெண் ஊழியர் கைகலப்பு

மதுரையில் தேசிய நெடுஞ்சாலையில் பைக் ரேஸ் செய்த இளைஞர்களால் சர்ச்சை