புதுச்சேரி பிச்சவீரன்பேட் பகுதியில் மது குடித்த போது ஏற்பட்ட தகராறில் ஜிப்மர் ஒப்பந்த ஊழியரை அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடி மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு.
புதுச்சேரி பிச்சவீரன்பேட் பகுதியை சேர்ந்தவன் அமுதானந்தன் (28), ஜிப்மரில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் மூலகுளம் பிச்சவீரன்பேட்டை அடுத்த ஜான்குமார் நகர் பகுதிகளில் மது அருந்தியுள்ளனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் வேகமாக சென்றுள்ளனர்.
அப்போது அமுதானந்தன் மற்றும் அவருடன் மது அருந்தியவர்கள் பைக்கில் சென்றவர்களை தட்டிகேட்டுள்ளனர். இதில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர். பின்னர் அங்கிருந்த சென்ற மர்ம நபர்கள் மீண்டும் கூடுதலாக தனது நண்பர்களுடன் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் மீண்டும் வந்து அமுதானந்தம் மற்றும் அவருடன் இருந்தவர்களை சரமரியாக தாக்கியுள்ளனர். மேலும் இருசக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதில் அமுதானந்தம் தலையில் கட்டையால் அடித்ததில் நிலைகுலைந்து விழுந்துள்ளனர். இதனையடுத்து தாக்கிய நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். பின்னர் படுகாயமடைந்த அமுதானந்தமை உறவினர்கள் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அமுதானந்தம் உயிரிழந்தார்.
இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆய்வாளர் முத்துகுமார், உதவி ஆய்வாளர்கள் கலையரசன், அன்பழகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்த தடையங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்த கொலை செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.