in

மயிலாடுதுறை சேந்தங்குடி பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நகைகளை திருடி செல்லும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

மயிலாடுதுறை சேந்தங்குடி பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நகைகளை திருடி செல்லும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடியில் பழமை வாய்ந்த பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆலய அர்ச்சகர் சேஷாத்ரி முன்பக்கம் பூஜை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு தரிசனம் செய்ய வந்த நபர் ஆட்கள் யாரும் இல்லாததை கண்டு சுப்பிரமணியன் சன்னதி மற்றும் கஜலட்சுமி சன்னதி ஆகியவற்றுள் நுழைந்து சாமி கழுத்தில் அணிந்து இருந்த தங்கத்தால் ஆன நகையை திருடி சென்று விட்டார்.

இது குறித்தான சிசிடிவி காட்சிகளை வைத்து மயிலாடுதுறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் நகையை திருடியது மயிலாடுதுறை கூறைநாடு பசுபதி தெருவில் வசிக்கும் சிவகுமார் என்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து சிவக்குமாரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

What do you think?

தீபாவளி பண்டிகை முன்னிட்டு அய்யலூர் ஆட்டுச் சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்