புதுச்சேரியில் மலர் கண்காட்சியில் நடைபெற்ற அழகு நாய்கள் மற்றும் பூனைகள் கண்காட்சி
20 வகையை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்பு ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்
புதுச்சேரி அரசின் வேளாண் துறை சார்பில் 34வது மலர், காய், கனி கண்காட்சி 9ந்தேதி தொடங்கி 11ம் தேதியான இன்று வரை நடக்கிறது.
தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சியை பார்வையிட வரும் பொது மக்களுக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி அரசு கால்நடைத்துறை சார்பில் அழகு நாய் மற்றும், பூனைகள், கண்காட்சி நடைபெற்றது.இந்த கண்காட்சியில் 20 வகையை சேர்ந்த 200 நாய்கள் மற்றும் மூன்று வகையைச் சார்ந்த 10 பூனைகளும் இரண்டு பறவைகள் மற்றும் காவல்துறை சார்ந்த 6 நாய்களும் பங்கேற்றது.
இதன்படி சிப்பிபாறை,லேபர்,ஷெப்டு,கோல்டன் ரெட்ரீவர், ராட்வீலர்,டால்மேஷன்,பக், அஸ்க்கி,கிரெட்டன்,பிட்புல் உட்பட 20-க்கும் மேற்பட்ட வகையான நாய்கள் பங்கேற்று அணிவகுத்தல், கட்டளைக்கு கீழ்படிதல் என மேடையில் நிகழ்த்தி காட்டின.
இதில் காவல் துறை சார்ந்த 6 நாய்கள் கலந்து கொண்டு சாகசங்கள் செய்து காட்டின.இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். மேலும் கண்காட்சியில் கலந்து கொண்ட 200க்கும் மேற்பட்ட நாய்களில் 10 நாய்களும் பத்துக்கும் மேற்பட்ட பூனைகளில் மூன்று பூனைகளும் தேர்வு செய்யப்பட்டது.
கண்காட்சியில் வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நாய்கள் மட்டும் பூனைகளுக்கு பரிசுகளை வழங்கினார். அதேபோன்று காவல்துறை சார்பில் கலந்து கொண்ட நாய்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியை கண்காட்சிக்கு வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
இது குறித்து கால்நடையின் உரிமையாளர்கள் கூறும் பொழுது…
நாய்களை வீட்டில் பராமரித்து வளர்ப்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது வரவேற்க கூடியது என்றனர்.