in

மலர் மற்றும் காய்கனி கண்காட்சியை கவர்னர் தமிழிசை பார்வையிட்டார்


Watch – YouTube Click

புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் நடந்து வந்த மலர் மற்றும் காய்கனி கண்காட்சியை கவர்னர் தமிழிசை பார்வையிட்டார்.

புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் வேளாண்விழா மற்றும் 34 வது மலர் காய் கனி கண்காட்சி தாவரவியல் பூங்காவில் கடந்த 9 தேதி துவங்கியது விழாவினை முதல்வரங்க சாமி துவக்கி வைத்து பார்வையிட்டார்.

கண்காட்சியில் பொது மக்களின் பார்வைக்காக மலர் படுக்கை மற்றும் புல் வளாகத்தில் மலர்களின் அணிவகுப்பு, பாரதமாதா சிலை இசை நடன நீரூற்று, சிறுவர் உல்லாச ரயில் ஆகியவை இடம் பெற்றிருந்தன.

பல்வேறு வேளாண் மற்றும் தோட்டக்கலை உபகரணங்கள் பழம் மற்றும் காய்கறி நாற்றுகள் உரங்கள் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கண்காட்சியில் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம், ஜவஹர்லால் நேரு வேளாண் அறிவியல் கல்லூரி, தமிழக வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அதன் ஆராய்ச்சி நிலையங்கள் பல்வேறு கல்லூரிகளில் செயல்பாடுகள் பற்றிய அரங்குகள் இடம் பெற்றிருந்தன.

கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டனர் இளசுகள் முதல் பெரியவர்கள் வரை செல்பி எடுத்து மகிழ்ந்தனர்

இறுதி நாளில் மலர் காய் கனி கண்காட்சியை கவர்னர் தமிழிசை பார்வையிட்டார். துறை இயக்குனர் வசந்தகுமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

நிறைவு விழாவில் சபாநாயகர் செல்வம் அமைச்சர் தேனி ஜெயக்குமார் மணி பால் கென்னடி எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் விழாவில் மலர்களில் ஒன்பது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது இதில் மலர்ராணி பட்டத்தை புதுச்சேரி முத்துமாரியம்மன் திருவை சேர்ந்த ஜெயஸ்ரீ பிரியதர்ஷினி மலர் ராஜபாட்டை புதுச்சேரி பூபாலன் நகர் கணேசன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது இதே போல் காய்கனிப் பிரிவில் காய்கனி ராணி புர்ணாங்குப்பம் செந்தாமரை காய்கனி ராஜா, பூரணங்குப்பம் கலியமூர்த்தி ஆகியோருக்கு அளிக்கப்பட்டது பட்டம் பெற்றவர்களுக்கு கிரீடம் கிரீடம் அணிவித்து பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

ஸ்டாலின் போல் மிமிக்ரி செய்த டிடிவி தினகரன், கருத்து கணிப்பு பெயரில் மக்களை ஏமாற்றும் திமுக

புதுச்சேரியில் மனைவி நடத்தையில் சந்தேகத்தால் கணவனின் பகிரங்க செயல்