மாநில அதிமுக செயலாளர் அன்பழகன்…ஆளுநர் தமிழிசைக்கு மனு…
புதுச்சேரி…மத்தியபோதை பொருள் தடுப்பு பிரிவை புதுச்சேரியில் நிரந்தரமாக நிறுவ வேண்டும்…ஆளுநர் தமிழிசைக்கு அதிமுக மனு…
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து மனு அளித்தார்.அந்த மனுவில்,புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படும் கஞ்சா உட்பட உயர்ரக போதைப் பொருட்கள் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவை பப், ரெஸ்டோ பார்கள், சுற்றுலா பயணிகள் கூடும் இடங்கள். பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் மாநிலத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களது நிகழ்கால வாழ்க்கையை தொலைத்து விட்டு பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை கேந்திரமாக புதுச்சேரி மாறி உள்ளது.போதை பொருள் விற்பனையாளர்கள் தமிழகத்திலும், புதுவையிலும் இணைந்து விற்பனை செய்கின்றனர். கஞ்சா விற்பனையை தடுக்கக்கூட அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இரவு இரண்டு, மூன்று மணிவரை நடத்தப்படும் ரெஸ்டோ பார்களை இரவு 10 மணியுடன் மூட உத்தரவிட வேண்டும். போதைப்பொருள் கிடைக்கும் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் மீது டிஜிபி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
மத்திய போதைப் பொருள் தடுப்பு காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த திமுகவின் முன்னாள் பொறுப்பாளர் ஜாபர்சாதிக்குடன் புதுவை மாநிலத்தை சேர்ந்த பல்வேறு முக்கிய அரசியல்வாதிகளுக்கு மிக நெருக்கமான தொடர்பு இருப்பதாக புகைப்படங்கள் தொடர்ந்து வெளிவகின்றன.
இவர்கள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும். மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினை நிரந்தரமாக புதுவையில் கொண்டு வர வேண்டும் என அதிமுக மனுவில் வலியுறுத்தப்பட்டது…