முசிறி அருகே வளையெடுப்பு கிராமத்தில் குழந்தை கடத்துபவர் என நினைத்து வடமாநிலத்தவரை தாக்கிய 15 பேர் மீது வழக்குப்பதிவு.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் ராசப்பா (55 ) இவர் நாமக்கல்லில் பேருந்து நிலையம் அருகே உள்ள லாட்ஜில் தங்கி ஊர் ஊராகச் சென்று கடிகாரம் மற்றும் டார்ச் லைட் போன்ற பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று வளையெடுப்பு கிராமத்தில் பொருட்களை விற்பனை செய்ய வந்துள்ளார்.
அப்போது கிராமத்தைச் சேர்ந்த சிலர் குழந்தை கடத்தலில் ஈடுபட வந்த நபர் என நினைத்து அவரை அடித்து உதைத்துள்ளனர்.அதற்கு வெளி மாநில நபர் தான் டார்ச் லைட் கடிகாரம் விற்பனை செய்ய வந்துள்ளேன் என சொல்லி உள்ளார்.
அப்பகுதியினர் ஜம்புநாதபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து அவரது புகாரின் பேரில் வளையெடுப்பு கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் ,மாரியப்பன், காளிமுத்து . மருதை, தினேஷ் ,ராஜா. சிவா, கம்பராயன், பாஸ்கர் உள்ளிட்ட 15 பேர் மீது ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.