இந்த நாளில் பிறந்தால் இப்படி ஒரு அதிர்ஷ்டமா
பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள், விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், பெண்களுக்கு புடவைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள்
தமிழக முதலமைச்சர் பிறந்த நாளை கொண்டாடிய திமுகவினர்
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலினின் 71 வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் அரசு மருத்துவமனையில் மார்ச் 1 ஸ்டாலின் பிறந்த தினம் அன்று பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார் மேலும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பிரட், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கி நலம் விசாரித்தார்.
அதனைத் தொடர்ந்து மாட்டுப்பட்டி தெருவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் இளைஞர்களுக்கு கிரிக்கெட் பேட்,பால் வாலிபால் உள்ளிட்ட விளையாட்டு பொருட்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் பெண்களுக்கு புடவை உள்ளிட்ட நல திட்ட உதவிகளை வழங்கினார் அதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.