in

ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் ரூபாய் 20000 லஞ்சம் வாங்கிய திருவெறும்பூர் சார்பதிவாளர் கைது


Watch – YouTube Click

திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி .ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் ரூபாய் 20000 லஞ்சம் வாங்கிய திருவெறும்பூர் சார்பதிவாளர் கைது.

திருச்சி கே. கே. நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் கோபால கிருஷ்ணன் வயது 65 தந்தை பெயர் ராம கிருஷ்ணன் இவர் சொந்தமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

இவருக்கு நவல்பட்டு கிராமத்தில் இருந்த காலி மனையை கார்த்திகேயன் என்பவருக்கு விற்பதாகவும், அதற்காக 1.3.2024 ஆம் தேதி திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்வதாக முடிவு செய்துள்ளார்கள்.இது தொடர்பாக கோபால கிருஷ்ணன் 27 2 2024 அன்று திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகம் சென்று அங்கிருந்த சார்பதிவாளர் சபரி ராஜன் என்பவரை அணுகி பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக கேட்டுள்ளார். அதற்கு திருவெறும்பூர் சார் பதிவாளர் சபரி ராஜன் ஒரு பத்திரத்திற்கு பத்தாயிரம் விதம் இரண்டு பத்திரத்திற்கு 20 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே பத்திர பதிவு செய்து கொடுப்பதாக கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கோபால கிருஷ்ணன் திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்த புகாரின் பேரில் டிஎஸ்பி திரு மணிகண்டன் அவர்களின் தலைமையில் ஆய்வாளர்கள் திரு சக்திவேல் திரு பாலமுருகன், திருமதி சேவியர் ராணி மற்றும் குழுவினருடன்  மாலை 5 மணியளவில் பத்திரப்பதிவு முடிந்தவுடன் கோபால கிருஷ்ணன் வசம் இருந்து சார்பதிவாளர் சபரி ராஜன் (வயது 41) தனிநபர் சூர்யா (வயது 24) என்பவரின் மூலம் லஞ்ச பணத்தை பெற்ற போது கையும் காலமாக பிடிபட்டார். லஞ்ச ஒழிப்புத்துறையினரின் விசாரணை நடைபெற்று வருகிறது.


Watch – YouTube Click

What do you think?

தொடங்கியது பாராளுமன்ற தேர்தல் பரபரப்பு நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கும் திமுகவினர்

ரூ5 கோடி 32 லட்சம் மதிப்பீட்டில் தினசரி சந்தை மார்க்கெட்க்காண அடிக்கல் நாட்டும் பணி