in

வட கொரியாவில் வினோதம் நாய் வளர்க்க தடை ஆனால்


Watch – YouTube Click

வட கொரியாவில் வினோதம் நாய் வளர்க்க தடை ஆனால்…

வட கொரியா நாட்டில் நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்க்க அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகின் மர்மமான ஒரு நாடாக வட கொரியா விளங்குகிறது. அங்கு என்ன நடக்கிறது என்பது குறித்து அதிகம் வெளியில் தெரிவதில்லை. அந்நாட்டின் அரசாங்க ஊடகம் செய்தி வெளியிட்டால் மட்டுமே அந்நாட்டின் நடப்பது குறித்த தகவல்கள் வெளிவரும்.

அந்த வகையில் வட கொரியாவில் நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் நாய் இறைச்சி மற்றும் ரோமத்திற்காக நாய்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் தலைநகரான பியோங்யாங்கின் வடக்கே அமைந்துள்ள ஒரு மாகாணத்தின் ஆதாரத்தின்படி, கொரியாவின் சோசலிஸ்ட் பெண்கள் ஒன்றியம் மூலம் இந்த தடையானது அறிவிக்கப்பட்டுள்ளது.

வட கொரியா மற்றும் தென் கொரியா என இரு நாடுகளிலும் நாய் இறைச்சி உண்ணப்படுகிறது. ஆனால், தென் கொரியா நாட்டில் அது சர்ச்சையாக மாறியதால், அதன் உற்பத்தியை தடை செய்யும் சட்டம் சில மாதங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டது, வட கொரியாவில் நாய் இறைச்சி சூப் Dangogiguk என்ற பெயரில் வெளிநாட்டு பயணிகளுக்கு அவ்வபோது வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

மாநில அதிமுக செயலாளர் அன்பழகன்…ஆளுநர் தமிழிசைக்கு மனு…

அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க விழிப்புணர்வு பேரணி