ஸ்ரீ ஸ்கந்த ஸபாநாதர் நாட்டிய ஷேத்ரா சார்பில் உலக சாதனை
பழனி அடிவாரம் கிரிவீதியில் பழநியில் பரதம் என்ற தலைப்பில் ஸ்ரீ ஸ்கந்த ஸபாநாதர் நாட்டிய ஷேத்ரா சார்பில் நடைபெற்ற உலக சாதனை நாட்டிய நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டிய கலைஞர்கள் பங்கேற்றனர்.
பழனி அடிவாரம் அழகு நாச்சியம்மன் கோயில் பகுதியில் ஸ்ரீ ஸ்கந்த ஸ்பா நாதர் நாட்டிய சேத்ரா சார்பில் நாட்டிய உபச்சார உலக சாதனை நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியை சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி. செந்தில்குமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டியக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
64 உபசாரங்களில் கடவுளை நேரடியாக சென்றடையும் விதமாக பழனி முருகனுக்கு சுப்ரபாதம், திருப்புகழ், காவடிச்சிந்து ஆகியவை நாட்டியமாக பழனி முருகனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. சிறியவர் முதல் பெரியவர் வரை கலந்து கொண்ட நாட்டிய நிகழ்ச்சி தொடர்ந்து இருபது நிமிடங்கள் நடைபெற்றது. நாட்டிய உபச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாட்டிய கலைஞர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள், பதக்கங்களை கலைமாமணி முரளிதரன் வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுந்தரேச குருக்கள், ராமலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.