in

ஹேமமாலினி மகள் இஷா தியோல் திருமண பந்தம் முறிந்தது… காரணம் தெரியாமல் திணறும் பாலிவுட் பிரபலங்கள்

ஹேமமாலினி மகள் இஷா தியோல் திருமண பந்தம் முறிந்தது… காரணம் தெரியாமல் திணறும் பாலிவுட் பிரபலங்கள்

 

நடிகைகள் நடிகர்களை திருமணம் செய்வதும் பிறகு விவாகரத்து செய்வதும் சினிமாத்துறைக்கு புதிது அல்ல இந்த லிஸ்டில் புதிதாக சேர்ந்திருப்பவர்கள் ஹேமமாலினி தர்மேந்திராவின் மகளான இஷா தியோல்.

ஏற்கனவே தர்மேந்திரா, ஹேமமாலினி பிரிந்து அவரது முதல் மனைவியுடன் வாழ்வதாக கூறும் நிலையில் இவர்களின் மகள் இஷாவும் தான் கணவரை பிரிய முடிவெடுத்திருக்கிறார்.

இஷா தியோல் 2002ல் கோயி மேரே தில் சே பூச்சே { Koi Mere Dil Se Poochhe } என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் மணிரத்தினம், இயற்றிய ஆயுத எழுத்து என்ற தமிழ் படத்திலும் நடித்திருக்கிறார்.

பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்த பாரத் தக்தானி என்பவரை 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார், திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய இஷாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் கணவரை 12 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிவதாக இஷா அறிவித்து இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தினார். இப்பிரிவுக்காண காரணத்தை அவர் வெளி உலகத்திற்கு தெரிவிக்கவில்லை.

ஆனால் அவர் கொடுத்த விளக்கமாவது எங்கள் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் கணவரும் நானும் பரஸ்பர சமாதத்துடன் தான் பிரிந்து விட்டோம் குழந்தைகள் எங்களுக்கு முக்கியம் என்றும் அறிவித்திருக்கிறார்.

What do you think?

ஸ்ருதியை வைத்து என்ன..பா பண்ற லோகி… பதில் தெரியாம காண்டாவுது தல

இணையவாசிகள் மேல் கோபம் கோப்பளிக்க கேள்வி கேட்ட ராஷ்மிக்கா.. அப்போ தயாரிப்பாளர்கள் தலையில் துண்டா