1.53 கோடி மதிப்பில் திருமண நிதி உதவிதொகை
தென்காசியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் 394 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கமும், ரூபாய் 1.53 கோடி மதிப்பில் திருமண நிதி உதவிதொகை ஆகியவற்றை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் வழங்கினார்
தென்காசி மாவட்டம் குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் சமூக நலன் மகளிர் உரிமைத்துறையின் மூலம் திருமண உதவி திட்டம் கீழ் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு 394 பயனாளிகளுக்கு 3152 கிராம் தாலிக்கு தங்கமும், ரூபாய் 1.53 கோடி மதிப்பிலான திருமண நிதி உதவித்தொகைக்காண காசோலையை வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
ஏனென்றால் பெண்களுக்கு செய்யப்படும் சலுகைகள் அனைத்தும் நேரடியாக வீடு சென்று சேரும் என்ற அடிப்படையில் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்பட்டு வருவதாக கூறினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.