10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என புகார்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே குறிஞ்சாங்குளம் கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என புகார் தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே மதுரை சாலையில் சாலை மறியல் போராட்டம்
அருப்புக்கோட்டை அருகே குருஞ்சாங்குளம் கிராமத்தில் மாணிக்கவள்ளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் கோவிலை சுற்றி ஊரணி இருப்பதால் மனு அளித்து செல்லுமாறு வட்டாட்சியர் அறிவுறுத்தி உள்ளார். அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் தங்கள் பகுதியில் பத்து நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என புகார் தெரிவித்தனர். அதற்காக குறிஞ்சாங்குளம் கிராம மக்கள் அனைவரும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து நேராக வட்டார வளர்ச்சி அலுவலகம் சென்றனர்.
ஆனால் அங்கு வட்டார வளர்ச்சி அலுவலர் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென குறிஞ்சாங்குளம் கிராம மக்கள் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே மதுரை சாலையில் பேருந்துகளை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மறியல் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த டிஎஸ்பி ஜெகன்நாதன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் அதனை தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி(கிராம ஊராட்சிகள்), மற்றும் டிஎஸ்பி ஜெகன்நாதன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பொது மக்களின் பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை எடுத்து மக்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். மறியல் போராட்டம் காரணமாக அப்குதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது