புதுச்சேரியில் மின்கம்பம் விழுந்து பலியான இளைஞரின் குடும்பத்திற்கு 10 லட்சம்
புதுச்சேரியில் மின்கம்பம் விழுந்து பலியான இளைஞரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி அடுத்த சஞ்சீவி நகரை சேர்ந்தவர் கந்தன் இவரது மகன் 24 வயதான அவினாஷ் இவர் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது சாலையில் ஓரம் இருந்த மின்கம்பம் எதிர்பாராமல் தலையில் விழுந்து படுகாயம் அடைந்தார்.
இதன் அடுத்த அவர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் மேலும் சேர்க்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் மூலைச்சாவு அடைந்து உயிரிழந்தார்.
உயிரிழந்த அவினாஷின் கண்கள் தானம் செய்யப்பட்ட நிலையில் மின் கம்ப விழுந்து உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம் தலைமையில் இளைஞரின் உறவினர்கள் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி மின்கம்பம் விழுந்து உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் முதல் கட்டமாக தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் 50,000 நிதியும் அரசு சார்பில் வழங்கப்படும் ஈம சடங்கு நிதியும் உடனடியாக வழங்கப்பட்டது.