in

இம்ரான் கானுக்கு 10 ஆண்டு ஜெயில்


Watch – YouTube Click

இம்ரான் கானுக்கு 10 ஆண்டு ஜெயில்

 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான் கான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் என்ற அரசியல் கட்சியை நடத்தி வந்தார். 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றிபெற்று சில கட்சிகளுடன் ஆதரவுடன் பிரதமராக பொறுப்பேற்றார்.

ஆனால், 2022ஆம் ஆண்டு இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து வெற்றிபெற்றதால் பதவியை இழந்தார்.

நவாஷ் ஷெரீபின் தம்பி ஷெபாஷ் ஷெரீப் தலைமையிலான முஸ்லீம் லீக் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. எனினும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தை ஷெபாஸ் ஷெரீப் கலைத்துவிட்டார்.

தற்போது கக்கார் தலைமையிலான இடைக்கால அரசு பாகிஸ்தானை வழிநடத்தி வருகிறது. பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு இம்ரான் கானுக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டன.

தனக்கு வந்த பரிசுப் பொருட்கள கருவூலத்தில் சேர்க்காமல் விற்றுவிட்டதாக தொடரப்பட்ட தோஷகானா வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கின் தீர்ப்பை நிறுத்தி வைத்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது. ஆனாலும் அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை.

ரகசியக் காப்பு உறுதியை மீறி அமெரிக்காவின் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக இம்ரான் கானுக்கு எதிராக தொடரப்பட்ட சைபர் வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம், இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அதேபோல தெஹ்ரீக்-இ-இன்சாஃப் துணை தலைவரும், அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சருமான ஷா மஹ்மூத் குரேஷிக்கும் 10 ஆண்டுகள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து இம்ரான் கான் மற்றும் குரேஷி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்று கூறப்படுகிறது.


Watch – YouTube Click

What do you think?

உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் தொடக்கம்

திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் ஜாமீன் மனு விரைவில் விசாரணை