in

100 நாள் வேலை திட்டத்தில் வேலை நாட்கள் உயர்த்தி வழங்கப்படும் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தகவல்

100 நாள் வேலை திட்டத்தில் வேலை நாட்கள் உயர்த்தி வழங்கப்படும் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தகவல்

 

100 நாள் வேலை திட்டத்தில் வேலை நாட்கள் உயர்த்தி வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தகவல்..

புதுச்சேரி உள்ள மேல் சாத்தமங்கலம் அரியூர் ஆரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள் பழுதடைந்து இருந்தது.

இதனை தனியார் அமைப்பு மூலம் சுமார் 30 லட்சம் ரூபாய் செலவில் அங்கன்வாடி மையங்கள் புனரமைக்கப்பட்டு இதை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சமூக நலத்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் அங்கன்வாடிகளை திறந்து வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசி அவர்..

தமிழகம் சுய சார்பான மாநிலம் ஆனால் புதுச்சேரி என்பது மத்திய அரசை சார்ந்து இருக்கக்கூடிய ஒரு மாநிலமாகும் அதனால் மத்திய அரசு ஒதுக்கும் நிதிகளையே நாம் செலவு செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் முதியோர் உதவி தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது மாதா மாதம் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்ட அவர் 100 நாள் வேலை நாட்களை அதிகரிக்க உள்ளதாகவும் மேலும் வழங்கப்படுகின்ற சம்பளத்தையும் உயர்த்தி வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் முக்கிய நிர்வாகிகள் தொகுதி பிரமுகர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

What do you think?

கடல் சீற்றம் குறைவால் கரை பகுதிக்கு படையெடுக்கும் விதவிதமான மீன்கள்

வைர விழா ஆண்டை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் உரையை வெளியிட்ட மாவட்ட ஆட்சியாளர்