in

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுப்பிரமணியர் திருக்கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை…

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுப்பிரமணியர் திருக்கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை…

 

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வட வீதி சுப்பிரமணியர் திருக்கோவிலில் ஆடிக்கிருத்திகையை ஒட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை…

மாட வீதிகளில் வான வேடிக்கை அதிர முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி…

தமிழகம் முழுக்க ஆடி கிருத்திகை தினமான இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ. வட வீதி சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ. முருகப்பெருமானுக்கு பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் விமர்சையாக நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ஸ்ரீ.சுப்பிரமணிய சுவாமிக்கு பல்வேறு வண்ண வண்ண மலர்களைக் கொண்டு மலர் மாலைகள் தொடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

பின்னர் முருகப் பெருமானுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தீப தூப ஆராதனை நடைபெற்று தொடர்ந்து நட்சத்திர ஆரத்தியம் கற்பூர ஆரத்தியும் காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து திருக்கோவில் ஊழியர்களால் முருகப்பெருமான் தோலில் சுமந்தவாறு திருக்கோவிலில் வலம் வந்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மயில் வாகனத்தில் எழுந்தருளி வான வேடிக்கைகள் அதிர மாட வீதியில் வலம் வந்து இரவு பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

வழிநெடுகிலும் மாடவீதி முழுக்க ஏராளமான பக்தர்கள் திரண்டு முருகப்பெருமானை சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

What do you think?

பழனி மலைக்கோயிலில் ஆடிமாதம் கிருத்திகையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

அரசியல் பிரமுகருக்கும் மீனாவுக்கும் தொடர்பு இருபது உண்மையா?…. மீனா பதிலடி