in ,

ஆடிப்பூரம் முன்னிட்டு நாமக்கல் ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன்க்கு 1000 கண் அலங்காரம்

ஆடிப்பூரம் முன்னிட்டு நாமக்கல் ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன்க்கு 1000 கண் அலங்காரம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்..

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உலக புகழ்பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. ஆடி மாதம் ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை பல்வேறு அலங்காரங்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு வந்த நிலையில் ஆடிப்பூரம் முன்னிட்டு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன்க்கு 1000 கண்கள் கொண்டு ஆயிரம் கண்ணுடையாள் அலங்காரம் செய்யப்பட்டது.
முன்னதாக ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் க்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நிண்ட வரிசையில் நின்று ஆயிரம் கண் கொண்ட அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு அலங்காரத்தை கோவில் பூசாரிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

What do you think?

நாமக்கல் மகாமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா யாக சாலை முகூர்தகால் ஊன்றும் நிகழ்வு

ஆடி திருவிழா முன்னிட்டு அரசு வேம்பு மரத்துக்கு திருக்கல்யாணம்