in

தமிழ் புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு 1000 ரூபாய்

தமிழ் புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு 1000 ரூபாய், தமிழர் திருநாளான தைப் பொங்கல் அன்று ஆயிரம் முதல்வர் மருந்தகம் திறக்கப்படும் என அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நெல்லை மாநகராசி சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் மாநகராட்சி மைய மண்டபத்தில் மேயர் ராமகிருஷ்ணன் தலைமையிலும் துணை மேயர் ராஜூ, மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது . மேயர் திருக்குறள் வாசித்து கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

கூட்டம் தொடங்கியதும் மாணவர்கள் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் மாதம் 1000 ரூபாய் திட்டம், தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருநாள் அன்று தமிழகம் முழுவதும் 1000 ஆயிரம் முதல்வர் மருத்தகம் திறக்கப்படுவது, சுதந்திரப் போராட்ட தியாகிகளின் ஓய்வூதியத்தை உயர்த்தியதற்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை அடுத்து கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் கேட்டு கோரிக்கை விடுத்து பேசினர். மேலும் கூட்டத்தில் 91.91 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது, உள்பட 43 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

What do you think?

திருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய குளத்தின் நடுவே கிணறு வெட்ட அனுமதி வழங்கக் கூடாது