1000-திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்கள் பாதிப்பு
திருவையாறு அருகே வரக்கூர் பகுதியில் 1000-திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்கள் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு முற்றிலும் பாதிப்பு…
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை….
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுக்கா வரக்கூர், கோனேரிராஜபுரம், கருப்பூர் ,செந்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிர் சாகுபடி செய்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் பெய்த தொடர் மழையினால் கூலாங்கடுங்கால் ஆறு உடைப்பு ஏற்பட்டு விவசாயிகள் நெல் பயிர் சாகுபடி செய்துள்ள விலை நிலங்கள் முழுவதும் நீரில் மூழ்கி முற்றிலும் பாதிப்பு அடைந்துள்ளது.
இதனால் தமிழக அரசின் சம்பந்தப்பட்ட வேளாண்மை துறை அதிகாரிகள், மாவட்டத்துறை அதிகாரிகள் நேரடியாக பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.