in

மரக்காணத்தில் 1000 ஆண்டு பழமை வாய்ந்த பூமி ஈஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்

மரக்காணத்தில் 1000 ஆண்டு பழமை வாய்ந்த பூமி ஈஸ்வரர் கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை ஓரம் அரசர்கள் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க 1000 ஆண்டு பழமை வாய்ந்த பூமி ஈஸ்வரர் கோயில் உள்ளது.இக்கோயில் கடந்த நூறு ஆண்டுக்கு மேலாக மறுசீரமைப்பு செய்யாமல் இருந்தது. இந்நிலையில் தற்பொழுது இந்து அறநிலையத்துறை சார்பில் பல லட்ச ரூபாய் மதிப்பில் கோயிலை மறு சீரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்தஏற்பாடு செய்யப்பட்டது.இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி கணபதி ஓமத்துடன் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து முதல் கால யாகங்கள் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கால மூன்றாம் கால யாக பூஜைகளும் சிறப்பு ஆராதனைகளும்நடந்தது.

இந்நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நான்காம் கால யாகசாலை நிகழ்ச்சிகள் சிறப்பு ஆராதனைகள் மற்றும் தீப ஆராதனை நிகழ்ச்சிகளுடன் கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சிகளுடன் மகா கும்பாபிஷேக விழாநிகழ்ச்சிகள் தொடங்கியது. இந்நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வேத விற்பனர்களின் வேத மந்திரங்கள் முழங்க வான வேடிக்கை நிகழ்ச்சிகளுடன் மங்கல இசை நிகழ்ச்சிகளோடு பொது மக்களின் ஓம் நமச்சிவாய கோஷங்களுடன் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றும் மகா கும்பாபிஷேக விழா நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.இந்த மகா கும்பாபிஷேக விழாவில் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிகள் அனைத்து ஏற்பாடுகளையும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள்செய்து இருந்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

What do you think?

குறிஞ்சிப்பாடியிலிருந்து சிதம்பரம் நோக்கி சென்ற அரசு பேருந்து ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சுவலி

திண்டிவனம் ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத ஸ்ரீ இலட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோவில் ஸம்ப்ரோக்ஷண பாலாலய விழா