காரியாபட்டி அருகே முடியனூர் கண்மாயில் 10 ஆயிரம் மீன் குஞ்சுகள் செத்து மிதப்பு – பொதுமக்கள் அதிா்ச்சி
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே முடியனூர் கிராமத்தில் சுமாா் 50 ஏக்கா் பரப்பிலான முடியனூர் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் கிராமத்தில் இருந்து இளைஞர்கள் சாா்பில் மீன்கள் வளா்க்க ஆண்டு தோறும் 20-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மீன் குஞ்சுகள் விடுவது வழக்கம்.
ஆண்டுதோறும் மீன்களை வளர்த்து அனைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில் மீன் பிடித்திருவிழா நடத்தப்படுவதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது.
இதைத்தொடா்ந்து முடியனூர் கண்மாயில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன் குஞ்சுகள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விடப்பட்டன.
தற்போது அவை வளா்ந்து வந்த நிலையில் கண்மாய் நடுவில் இருந்த கிணற்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் இறந்து மிதப்பதாக கிராம மக்களுக்கு தகவல் கிடைத்ததுள்ளது.
இதனையடுத்து முடியனுர் கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் அங்கு சென்று பாா்த்தபோது
கண்மாய் நடுவில் இருந்த கிணற்று நீரில் மர்மநபர்கள் யாரோ விஷம் கலந்ததால் மீன்கள் இறந்து போனது தெரியவந்தது.
இதுகுறித்து மல்லாங்கிணறு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேலும் மீன்கள் இறந்து செத்து மிதப்பதால் துர்நாற்றமும் வீசுகிறது இதனை அகற்றி மற்ற ஆடு, மாடுகள் இந்த தண்ணீரை குடிக்காத அளவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.